ஊழல்வாதிகளை காட்டிக்கொடுக்க உதவி எண் அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காட்டி கொடுக்கும் ஸ்டிங்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காட்டி கொடுக்கும் ஸ்டிங் ஆப்ரேசன் பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளார்.
011-27357169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஊழல்வாதிகளை எப்படி காட்டிகொடுப்பது என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்:
காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த உதவி எண் வேலை செய்யும்.
அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு டிஜிட் உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த உதவி எண்ணை தில்லிவாசிகள் அனைவரும் பயன்படுத்தலாம்.
உதவி தேவைப்படும் எனில் தில்லி போலீஸ் உதவும்.
மாநில லஞ்ச ஒழிப்பு துறை இதனை கண்காணிக்கும்.
அதே நேரத்தில் இந்த உதவி எண் வாயிலாக லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த புகார்களை அரசுக்கு தெரிவிக்க முடியாது.