முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊக்க மருந்து விவகாரம்: சிம்ப்சன், பாவெலிடம் விசாரணை

ஜமைக்கா தடகள வீராங்கனை ஷேரோன் சிம்ப்சன் ஊக்க மருந்து உட்கொண்டாரா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று  முன்னாள் தடகளச் சாம்பியன் அசஃபா பாவெல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

ஜமைக்கா தடகள வீராங்கனை ஷேரோன் சிம்ப்சன் ஊக்க மருந்து உட்கொண்டாரா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று  முன்னாள் தடகளச் சாம்பியன் அசஃபா பாவெல் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஜமைக்காவில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அந்நாட்டு வீராங்கனை ஷேரோன் சிம்ப்சன் ஊக்க மருந்து உட்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிம்ப்சனின் சக நாட்டு வீரர் அசஃபா பாவலிடம் ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தியது.

 இதில் சிம்ப்சன் போதை மருந்து உட்கொண்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாவல் சுறியுள்ளார்.. அதே  தடகள போட்டியில் அசஃபா பாவலும் ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தததையடுத்து  அவரிடமும் ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விசாரணை விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.