கடலூர் மாவட்டத்தில் இம்மாதம் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை!
பொங்கல் பண்டிகை, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. விடுமுறை விபரங்கள் வருமாறு:
பொங்கல் பண்டிகை, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. விடுமுறை விபரங்கள் வருமாறு:
ஜன.11 சனிக்கிழமை- வைகுண்ட ஏகாதசி, ஜன.12 ஞாயிற்றுக்கிழமை- வார விடுமுறை, ஜன.13 திங்கள்கிழமை- போகி பண்டிகை, ஜன.14 செவ்வாய்க்கிழமை- பொங்கல் பண்டிகை, ஜன.15 புதன்கிழமை- திருவள்ளுவர் திருநாள், ஜன.16 வியாழக்கிழமை- உழவர் திருநாள், ஜன.17 வெள்ளிக்கிழமை- தைப்பூசம் (வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட விடுமுறை), ஜன.18-ம் தேதி சனிக்கிழமை- வாரவிடுமுறை, ஜன.19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை- வாரவிடுமுறை.
ஜன.13-ம் தேதி திங்கள்கிழமை போகிப்பண்டிகை அன்று அரசு அலுவலகங்கள் இயங்கும், ஜன.18-ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஜன.13-ம் தேதி அரசு அலுவலர்களும், ஜன.18-ம் தேதி ஆசிரியர்களும் விடுப்பு எடுத்தால், மொத்தம் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
Advertisement