பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் காடப்பிள்ளை என்பவரது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் காடப்பிள்ளை என்பவரது மகன் கோவிந்தராஜ்(14).இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று கடித்து விட்டு மறைந்து விட்டது.
இதனையறிந்த சிறுவனது பெற்றோர் பொன்னமராவதி பாப்பாயி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.இது குறித்து பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் எஸ்.செந்தமிழன வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.