மீடியாக்கள் நீதிபதிகள் போல செயல்படுகின்றன: அகிலேஷ் கடும் அதிருப்தி
உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் ஆயிரக்னக்கானனோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும குளிரால் பாதிக்கப்பட்டு, 25
உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் ஆயிரக்னக்கானனோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும குளிரால் பாதிக்கப்பட்டு, 25 குழந்தைகள் அந்த முகாமில இறந்த நிலையில், அகிலேஷ் யாதவ், பிரபல நடிகர்,. நடிகைகளின் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற சய்பாய் என்ற கலைநிகழ்ச்சியை ரசிக்கிறார் என செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 'சய்பாய் நிகழ்ச்சி ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல; அதில், பல்வேறு நல திட்ட உதவிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சியையோ, அதில் பங்கேற்ற நடிகர்களையோ குற்றம் சாட்டுவது சரியானதல்ல இவ்வாறு அகிலேஷ் தெரிவித்துள்ளார்