முகப்பு
தற்போதைய செய்திகள்

விருத்தாசலம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

விருத்தாசலம் புற வழிச்சாலையில் இன்று அதிகாலை  லாரி, கார் நேருக் நேர் மோதி கார் தீ பிடித்து எரிந்தது.இதில் 5 பேர் உடல் கருகி இறந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

விருத்தாசலம் புற வழிச்சாலையில் இன்று அதிகாலை  லாரி, கார் நேருக் நேர் மோதி கார் தீ பிடித்து எரிந்தது.இதில் 5 பேர் உடல் கருகி இறந்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த தனசெழியன், ராஜதுரை,          சண்முகவேலு, மாயவேல் சேலம் சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் கார் விருத்தாசலம் சேலம் புறவழிச்ச சாலையில் சித்தலூர் என்ற இடத்தில் வந்த போது எதிரே காட்டுமன்னார்கோவில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மீது மோதியது இதில் லாரியின் டீசல் டேங் தீபிடித்து கார் முற்றிலும் எரிந்து சேதமானது, காரில் பயணம் செய்த பாலகுரு, தனசெழின், ராஜதுரை, சண்முகவேலு, மாயவேலு, ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.

Advertisement

ராஜேந்திரன் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார். இவர் என்எல்சி  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பலத்த காயமடைந்த  ராஜேந்திரன்   மருத்துவனையில் சேர்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு   அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments