முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதிபதி மீதான பாலியல் புகார்; தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படும்: வீரப்பமொய்லி

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுவேதந்தர் குமார் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதியாக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீதான பாலியல் குற்றசாட்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுவேதந்தர் குமார் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதியாக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீதான பாலியல் குற்றசாட்டை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. சுவேதந்தர் குமாருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு சட்ட அமைச்சகம் முடிவுசெய்துள்ளது என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பெண் வழக்கறிஞர் ஒருவர்  நீதிபதி சுவேதந்தர் குமார் மீது தலைமை நீதிபதி சதாசிவத்திடம் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:  கடந்த 2011ஆம் ஆண்டு நீதிபதி சுவேதந்தர் குமாரிடம் பயிற்சி பெற்ற போது, அவர் என்ன பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்., அதனால், மேற்கொண்டு பயிற்சியைக் கூட முடிக்காமல், பாதியிலேயே நின்று விட்டேன்.

 தற்போது நீதிபதிகள் மீதான புகார்கள் எழுந்திருப்பதால், நானும் புகார் அளிக்க முன்வந்துள்ளேன். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது பயிற்சி பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், மீண்டும் ஒரு நீதிபதி பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.