விருந்து சாப்பிட்ட இளம் பெண் பலி; 5 பேருக்கு வாந்தி மயக்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். மேலும் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளம்பெண் பலியானதற்கு உணவு விஷத்தன்மையுடையதாக இருந்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது.