மதுரை அருகே உள்ள நாகமலை, புதுக்கோட்டையில் கிராமந்தோறும் காங்கிரஸ் இல்லந்தோறும் கைச்சின்னம் என்ற பிரச்சார நிகழ்ச்சியை துவக்கி வைத்தும், காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிராமங்கள் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கைச் சின்னம் என்ற சிறந்த லட்சியத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். அனைவருக்கும் உணவு, கட்டாயக் கல்வி, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை வெற்றிக் கூட்டணி அமையும். தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் தலைமையால் வெளியிடப்பட உள்ளது.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன், எம்.பிக்கள், ஆரூன் உள்ளிட்டோர், முன்னாள் எம்.பி. ராம் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.