முகப்பு
தற்போதைய செய்திகள்

காணும் பொங்கல்: பழவேற்காட்டில் 25ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வியாழக்கிழமை காணும் பொங்கலை யொட்டி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோர கிராமமான பழவேற்காடுக்கு

தற்போதைய செய்திகள்

காணும் பொங்கல்: பழவேற்காட்டில் 25ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வியாழக்கிழமை காணும் பொங்கலை யொட்டி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோர கிராமமான பழவேற்காடுக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

காணும் பொங்கலை யொட்டி பழவேற்காடு கடற்கரையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வியாழக்கிழமை காணும் பொங்கலை யொட்டி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோர கிராமமான பழவேற்காடுக்கு பெரியபாளையம், ஆரணி, செங்குன்றம், கும்மிடிபூண்டி,மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் வந்தனர். பழவேற்காடுக்கு  வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் குடும்பத்துடன் கட்டுச்சோறு உண்டு மகிழ்ந்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், கடலில் குளிக்கவும், மதுபானங்கள் எடுத்து செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.  இதன் காரணமாக பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள போலாட்சியம்மன் குளம் சோதனை சாவடியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்து பின்னரே போலீஸார் அனுப்பி வைத்தனர். சோதனையின்போது  பிடிபட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

பொன்னேரி டி.எஸ்.பி. எட்வர்ட் தலைமையில் பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், சோழவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் பழவேற்காட்டில் உள்ள டச்சுக்கல்லரைகள், புனித மகிமை மாதா ஆலயம், நிழல் விழும் கடிகாரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவற்றை கண்டு களித்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லை..... 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நிலையில் கழிப்பிடம், குடிநீர்,  உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலதாத்துறை சார்பாக செய்து தரப்படாததால் பழவேற்காடு வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கூடுதல் பஸ் வசதிகள்.... பழவேற்காடு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழவேற்காடு பகுதிக்கு இயக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →