சிதம்பரம் கிராமத்தில் பொங்கல்விழா கொண்டாடிய அமெரிக்கர்கள்
சிதம்பரம் அருகே கிராமத்தில் அமெரிக்கர்கள் 19 பேர் கொண்ட சைவப் பிரியர்கள் குழுவினர் தமிழக கலாச்சாரப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
சிதம்பரம் அருகே கிராமத்தில் அமெரிக்கர்கள் 19 பேர் கொண்ட சைவப் பிரியர்கள் குழுவினர் தமிழக கலாச்சாரப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
சிதம்பரம் அருகே உள்ள புத்தூர் நெடுஞ்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமிவிலாஸ் ஹெரிட்டேஜ் ஹோட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த பூரண சைவப் பிரியகள் கொண்ட 19 பேர் குழுவினர் தங்கி, அங்கு தமிழக கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து கொண்டு கிராமப்புற மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். சிலம்பம், காவடி, கரகம், கோலாட்டம், கும்மி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசித்தனர்.
மேலும் புத்தூர் நெடுஞ்சேரியிலிருந்து அருகாமையில் உள்ள நெய்வாசல் கிராமத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர்கள் செல்லும் வழியில் வயல்வெளியில் சம்பா நெல் சாகுபடி அறுவடை மற்றும் உளுந்து பயிர் விதைப்பதை பார்வையிட்டு, தமிழக வேளாண் பாசனம் மற்றும் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
Advertisement