முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக் கோரி பிப்-5ல் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவரவர் தகுதிக்கேற்ப பொங்கல் கருணைத் தொகையை நிர்ணயித்து பொங்கலுக்கு முன்னதாகவே வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அண்ணாமலைப்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பொங்கள் கருணைத் தொகை வழங்கக் கோரி பிப்.5-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவரவர் தகுதிக்கேற்ப பொங்கல் கருணைத் தொகையை நிர்ணயித்து பொங்கலுக்கு முன்னதாகவே வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மட்டும் இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை. எனவே இம்மாத சம்பளத்துடன், ஊழியர்களுக்கு கருணைத் தொகை வழங்காவிடில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக முன்பு பிப்.5-ம் தேதி மாவட்டத் தலைவர் சுகுமாறன் தலைமையில், நகரத் தலைவர் திருமாறன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.