இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.. டாஸ் வென்ற இந்தியா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது
இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.. டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 77 ரன்களும், டெய்லர் 57 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழத்தினார்.
மழைக்காரணமாக டக்வர்த் லீவிதிப்படி இந்திய அணிக்கு 42ஓவர்களில் 293 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீதமுளள 3 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் இந்தியா அணி டக்வர்த் லீ விதிப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி 78 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது