முகப்பு
தற்போதைய செய்திகள்

மேல்முறையீடு செய்த 60 தினங்களுக்குள் குடும்ப அட்டை: சிதம்பரம் தனி வட்டாட்சியர் தகவல்

சிதம்பரம் பகுதியில் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கல் சோதனை செய்து புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதார் அட்டை புகைப்படம் எடுப்பது குறித்து முழு தகவல்கள் தெரிவிக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

குடும்ப அட்டை விண்ணப்பத்து பெறாதவர்கள் மேல்முறையீடு செய்தால் 60 தினங்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் டி.பழனி தெரிவித்தார்.

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புக்குழு காலாண்டு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்று. உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார்.

சிதம்பரம் பகுதியில் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கல் சோதனை செய்து புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதார் அட்டை புகைப்படம் எடுப்பது குறித்து முழு தகவல்கள் தெரிவிக்க வேண்டும், சிதம்பரம் புறவழிச்சாலையில் வாகன விபத்தை தவிர்க்க ஒளிர்ப்பான் ஸ்டிக்கர்கள் மற்றும் ஒளிப்பான் பெயர் பலகை ஆகியவை வைக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்தன.

கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு, நுகர்வோர் அமைப்பு பொதுச்செயலாளர் கணேசன், சேத்தியாத்தோப்பு செயலாளர் தமிழரசன், காட்டுமன்னார்கோயில் நுகர்வோர் அமைப்பு செயலாளர் முத்துக்குமரன், மின்வாரிய செயற்பொறியாளர் செ.வீணா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் எஸ்.மயில்வாணன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் வி.வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கு.புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.