முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜமுந்திரியில் பள்ளிக்கு சென்ற 5 சிறுமிகள் மாயம்

ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் நேற்று வேவ்வேறு பள்ளியைச் சேர்ந்த  5 சிறுமிகள்  மாலையில் வீடு திரும்பவில்லை.  அவர்களின் பெற்றோர்கள் சிறுமிகளை பல இடங்களில் தேடியும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் நேற்று வேவ்வேறு பள்ளியைச் சேர்ந்த  5 சிறுமிகள்  மாலையில் வீடு திரும்பவில்லை.  அவர்களின் பெற்றோர்கள் சிறுமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனையடுத்து போலீசில் இன்று புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி ராஜமுந்திரி சூப்பரண்டு ரவிகுமார் மூர்த்தி உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

மாநிலம் முழுவதும உள்ள  அனைத்து காவல்நிலையங்களில் சிறுமிகளின் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத், காக்கிநாடா, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு போலீஸ் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.