முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிசங்கர் அய்யருக்கு நாவடக்கம் தேவை : பாஜக

நரேந்திர மோடியை விமர்சிக்கும் மணிசங்கர் அய்யருக்கு நாவடக்கம் தேவை என தமிழக பாஜக துணை தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

நரேந்திர மோடியை விமர்சிக்கும் மணிசங்கர் அய்யருக்கு நாவடக்கம் தேவை என தமிழக பாஜக துணை தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியது: நரேந்திர மோடி பிப்.8 ந்தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்த முறை தமிழக மக்கள் தேசிய கட்சியை தெரிவு செய்யும் காலம்  நெருங்கி விட்டது.

எந்த திட்டமாக இருந்தாலும் 15 நாளில் வரும் என கூறும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மோடியை பொருளாதாரம் தெரியாதவர் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது மேலும் ராகுல் போன்ற மக்கு பையன்களை வைத்துக் கொண்டு எப்படி இவர்களால் மோடியை விமர்சனம் செய்ய முடிகிறது?

Advertisement

மோடியை விமர்சிக்கும் மணிசங்கர் அய்யரின் தடித்த நாக்கின் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இது போல் மீண்டும் பேசினால் பாஜக தொண்டர்களின் கோபத்திற்கு  நேரடியாக ஆளாக நேரிடும். அவருக்கு நாவடக்கம் தேவை. இதே போல சோனியாவின் கடந்த காலத்தை விமர்சிக்கும் தைரியம் அவருக்கு உண்டா? என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments