மயில் மற்றும் வெளிநாட்டு ஆந்தை காட்டில் விடப்பட்டன
சிதம்பரம் அருகே பிடிபட்ட மயில் மற்றும் வெளிநாட்டு ஆந்தை வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.
சிதம்பரம் அருகே பிடிபட்ட மயில் மற்றும் வெளிநாட்டு ஆந்தை வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.
சிதம்பரம் அருகே பொன்னங்கோயில் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையில் மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக ஒரத்தூர் போலீஸார் வனத்துறையினருக்கு கடந்த ஜன.16-ம் தேதி தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிதம்பரம் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் களப்பணியாளர்களுடன் சென்று அதே ஊரைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரிடமிருந்து 2 கால்களும் அடிப்பட்டு நடக்க முடியாமல் இருந்த மயிலை பெற்று கொண்டு வந்து புவனகிரி அரசு கால்நடை மருத்துவர் எம்.எஸ்.சக்திவேலிடம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வார சிகிசசைக்கு பின்னர் கால்கள் குணமாகி நல்ல நிலைக்கு வந்த மயிலை, மயில்கள் அதிகம் வாழும் காட்டுப்பகுதியில் வனத்துறையினரால் வியாழக்கிழமை பாதுகாப்பாக விடப்பட்டது.
வெளிநாட்டு ஆந்தை: சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அலுவலகத்தில் வியாழக்கிழமை வழிதவறி வந்த வெளிநாட்டு ஆந்தையை பிடித்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் நேரில் சென்று ஆந்தையை பெற்று அருகே உள்ள பிச்சாவரம் காப்புக்காட்டில் விடப்பட்டது.
Advertisement