ஆட்சியாளருக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள்; சேவகனுக்கு 60 மாதங்கள் கொடுங்கள்: மோடி
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:
இங்கு கூடியுள்ள அனைத்து தலைவர்கள் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி. குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் இங்கு கூடியுள்ளனர். உங்கள் சத்தம் வாரணாசியையும் தாண்டி ஒலிக்கிறது. வரும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விடுதலை கிடைக்கும், டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தின ஓட்டத்தில் கலந்து கொண்ட உத்தரப்பிரதே மக்களுக்கு நன்றி.இந்த ஓட்டம் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
50 லட்சம் மக்கள் இதில் கலந்து கொண்டனர் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட இரண்டுமடங்கு மிகப்பெரிய சிலையை படேலுக்கு இந்தியாவில் உருவாக்க உள்ளோம். விவசாயிகள் அனைவரும் இதற்கு தேயையான இரும்பை வழங்கும்படி கேட்டுகொள்கிறேன்.
பழங்குடியினரையும், தலித், மக்களையும் மனிதர்களாகவே கருதாமல் வாக்குவங்கிகளாகவே பார்க்கும் மனோபாவம் சிலகட்சியினருக்கு உள்ளது. நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக நான்கில் வெற்றி பெற்றுள்ளது இந்த நான்கு மாநிலங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி அடைந்தால் நாங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
ராஜஸ்தானில்34 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சட்டீஸ்கரில் மொத்தம உள்ள 10 தனித்தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜகவை தற்போது நம்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஏழ்மையை பற்றி மட்டுமே பேசுகிறது. தேர்தல்நேரத்தில் அவர்களுக்கு ஏழ்மையின் ஞாபகம் வருகிறது. ஏழ்மையை பற்றி மிகஅதிகமாக பேசும் காங்கிரஸ், அதனை போக்க இது வரை எந்த நடவடிககையும் எடுக்கவில்லை.நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த ஆட்சியாளர்களுக்கு 60 ஆண்டுகள் கொடுத்த நீங்கள், சேவகனாகிய எனக்கு, 60 மாதங்கள் கொடுங்கள் போதும் என்றார்.