படப் பிடிப்பில் நடிகர் ஷாருக் காயம்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்(49) ஹேப்பி நியூ இயர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார். இந்தபடத்தை பிரபல
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்(49) ஹேப்பி நியூ இயர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார். இந்தபடத்தை பிரபல இயக்குநரும் ஷாருக்கின் நெருங்கிய நண்பருமான பரூக் கான் இயக்கிவருகிறார்.
தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் காட்சி ஒன்று மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஜேடபிள்யூ மேரியாட் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சிறுவிபத்தில் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக படப்பிடிப்பு குழுதெரிவித்துள்ளது.