முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம் ஆத்மி உறுப்பினர் பட்டியலில் மோடி, ராகுல்!

ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பட்டியலில்,  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மோடி, வாஜ்பாய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பட்டியலில்,  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மோடி, வாஜ்பாய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

தில்லியில் ஆட்சியைப்பிடித்த ஆம் ஆத்மி வரும் ஜன.26 ஆம் தேதிக்குள் ஒருகோடிபேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்து தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

இணையதளத்தில் நிமிடத்தில் உறுப்பினராக சேரும் அளவிற்கு விதிமுறைகள் மிக எளிமையாக உள்ளது. அவ்வாறு உறுப்பினராக சேருபவர்களின் விவரங்கள் எதுவும் சரிபார்க்கப்படுவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மோடி, ராகுல் உள்ளிடட்ட பலதலைவர்களின் பெயர்கள், உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, ஆகியோரது பெயரும் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி 50 லட்சத்திற்கு மேல் ஆம் ஆத்மியில் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.