சிங்காரவேலு கமிட்டியை கண்டித்து சிதம்பரத்தில் பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
தனியார் பள்ளிக்கு கூடுதல் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்த நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், தமிழகஅரசை கண்டித்தும் மாணவர்களின்
தனியார் பள்ளிக்கு கூடுதல் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்த நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், தமிழகஅரசை கண்டித்தும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் சிதம்பரம் வடக்குரதவீதி தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.வெங்கடேசன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சி.செந்தில், நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான், சீனுவாசன், பெரியண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.