முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் காரில் வந்த ஜயேந்திரர்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள மொட்டை மண்டபம், நடண பந்தல் வழியாக 21 படி அருகே வரை காரில் வந்து இறங்கி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள மொட்டை மண்டபம், நடண பந்தல் வழியாக 21 படி அருகே வரை காரில் வந்து இறங்கி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மேற்கு வாயில் வழியாக வெளியே வந்த அவர் வெளிப் பிராகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் ஏறி கோயில் வளாகத்தில் தனிசன்னதியாக அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கோபுர மொட்டை மண்டபம் வழியாக வெளியேறினார்.

நடராஜர் கோயில் வரலாற்றில் முதன் முறையாக கோயில் உள்பிரகாரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல்முறையாகும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments