முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்சீனகடல் தீவுகளில் பறந்த பிநநாட்டு விமானங்களுக்கு சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமை தொடர்பாக ஜப்பான், சீனா, தென் கொரியா.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமை தொடர்பாக ஜப்பான், சீனா, தென் கொரியா. இடையே பிரச்சனை நிலவுகிறது.

கடந்த நவம்பர் மாதம் கிழக்கு சீனக்கடலில்  தனது பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய சீனா, அந்தப்பகுதியின்மேல் பிற நாட்டு விமானங்களை பறக்க தடைவிதித்துள்ளது.

இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும ஜப்பான் நாடுகள் அப்போதை கடுமையாக விமர்சித்தன. மேலும் தங்கள் நாட்டு விமானங்கள் பறக்கும் என்றும் சீனாவின் அனுமதி தேவையில்லை என்றும் விதிமுறைகளை புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தன.

 இந்நிலையில்  சமீபத்தில் பிற நாட்டு ராணுவ விமானங்கள் அநத் பகுதியில் பறந்து கொண்டிருந்ததாகவும், அதனை சீனவிமானங்கள் அருகில் சென்று எச்சரித்ததகாவும் அந்நநாட்டு விமானப்படை பிரிவு தகவல் தொடர்பாளர் ஷென் ஜின்கே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.