நடராஜர் கோயிலுக்கு திரளான வெளிநாட்டு பயணிகள் வருகை!
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து சுற்றி பார்த்தனர்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தனர். அவர்கள் உள்ளூர் மொழி பெயர்ப்பாளர்கள் உதவியுடன் கோயிலின் வரலாறு, சிற்பக்கலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் கோயில் கோபுர சிற்பங்கள், சிவகங்கை தீர்த்த குளம் உள்ளிட்டவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ரசித்தனர். கோயிலில் உள்ள சிற்பக்கலையை கண்டு அவர்கள் ஆச்சிரயமுற்று நீண்ட நேரம் அச்சிற்பங்களை பார்த்து, அது குறித்து விபரங்களை கேட்டறிந்தனர்.