மதுரை வந்த மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு
திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று மாலை மதுரை திரும்பினார்.விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயர் மன்னன்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜா,போஸ்
திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று மாலை மதுரை திரும்பினார்.விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயர் மன்னன்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜா,போஸ் முத்தையா உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்ட திமுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி கூறியபோது,என்னை வரவேற்க இங்கு வந்தவர்களுக்கு நன்றி, வழக்கம்போல் இந்த ஆண்டும் எனது பிறந்தாள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.