முகப்பு
தற்போதைய செய்திகள்

கண்தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு பாராட்டு சான்றிதழ்: கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65-வது குடியரசு தின விழாவில் கண்தானம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65-வது குடியரசு தின விழாவில் கண்தானம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழக தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்தானம், ரத்ததானம் ஆகியவற்றை பெறும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் 40 நாட்கள் ஆண் குழந்தையின் கண்களை தானமாக வழங்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் ஈகன்-தில்லைக்கரசி, 38 வயது இளைஞர் கலைவாணன் கண்களை தானமாக வழங்கிய அவரது அண்ணன் பிரபாகரன், 92வது தாயார் சரஸ்வதி அம்மாளின் கண்களை தானமாக வழங்கிய அவரது மகன் சந்தானம் ஆகியோருக்கு குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments