தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் மீன் வள துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடையேயான
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் மீன் வள துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடையேயான பேச்சுவார்த்தை இன்று காலை துவங்கியது.
பேச்சுவார்த்தையில், தமிழக அரசின் பார்வையாளராக அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பாக வெளியுறவு துறை இணைச் செயலர் சுசித்ரா துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கையின் சார்பில், அந்நாட்டு மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு பங்கேற்றது.
தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர்., பாக் ஜல சந்தி பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பதோடு, தங்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என்று தமிழகப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்..
சுமூக உடன்பாடு எட்டியது
பேச்சுவார்த்தை இறுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என இந்திய-இலங்கை மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இருநாட்டு அரசுகளும் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தபின் செயல்படுத்தப்படும் என்றும் பேச்சுவார்த்தை சுமூக சூழலில் நடந்தது எனவும், பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்