முகப்பு
தற்போதைய செய்திகள்

59 வயது நிறைவு: திருக்கடையூரில் சரத்குமார் - ராதிகா தம்பதி மாலை மாற்றி ஹோமம்

நடிகர் சரத்குமாருக்கு 59 வயது நிறைவு பெறுவதையொட்டி திருக்கடையூர் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  சரத்குமார்-ராதிகா தம்பதியருக்கு உக்ர ரத சாந்தி செவ்வாய்க்கிழமை இன்று காலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

நடிகர் சரத்குமாருக்கு 59 வயது நிறைவு பெறுவதையொட்டி திருக்கடையூர் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  சரத்குமார்-ராதிகா தம்பதியருக்கு உக்ர ரத சாந்தி செவ்வாய்க்கிழமை இன்று காலை நடைபெற்றது.

அமிர்தகடேஸ்வர குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவக்ரக ஹோமம் உள்ளிட்ட 11 ஹோமங்கள் செய்து வைக்கப்பட்டு இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

இதில் நடிகர் சங்க செயலர் நடிகர் ராதாரவி, ராதிகாவின் சகோதரி நடிகை நிரோஷா, சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.நாராயணன், நாகை  மாவட்ட செயலர் ஏ.பி.ராஜா, செம்பனார்கோயில் ஒன்றிய செயலர் கே.எம்.அருணாசலம், ஒன்றிய வர்த்தக அணி செயலர் எஸ்.சேரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments