முகப்பு
தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே டோல்கேட் ஊழியர் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே டோல்கேட் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து டோல்கேட் ஊழியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்-திருச்சி தேசிய

Updated On : 29 ஜனவரி, 2014 at 8:49 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:45 AM

உளுந்தூர்பேட்டை அருகே டோல்கேட் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து டோல்கேட் ஊழியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் காரல்மார்க்ஸ் என்பவர் பணி செய்து வருகிறார். அவர் டோல்கேட் பகுதியைச் தாண்டிச் செல்லும் வாகனங்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு ரசீது கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் ஏன் ரசீதை விரைவாக போடவில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதால் அவர் காரல்மார்க்ஸை தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காரை வேகமாக எடுத்துச் சென்றுவிட்டனர்.

 இச் சம்பவத்தை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் டோல்கேட் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டோல்கேட் மூடப்பட்டதால் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தினர். இச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.