முகப்பு
தற்போதைய செய்திகள்

கங்கையில் அடித்து செல்லப்பட்ட 14 பேர் கதி என்ன? பீகாரில் சோகம்

பீகார் மாநிலம் சவுசா மண்டலம் நயாசிபுர் கிராமத்தை சேர்ந்த 22 பேர், காசியாபுர் மாவட்டத்தில் உள்ள பலியா என்ற கிராமத்தில் விவசாய வேலை பார்ப்பதற்காக நேற்று கங்கை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

பீகார் மாநிலம் சவுசா மண்டலம் நயாசிபுர் கிராமத்தை சேர்ந்த 22 பேர், காசியாபுர் மாவட்டத்தில் உள்ள பலியா என்ற கிராமத்தில் விவசாய வேலை பார்ப்பதற்காக நேற்று கங்கை நதியில் படகில்  சென்றனர்.  10 பேர் மட்டுமே செல்லக்கூடிய  படகில் 22 பேரும் சென்றனர் 

சவுசாபசார் அருகே சென்று கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் 8 பேர் மட்டும் நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தனர். மீதமுள்ள 14 பேரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

 தகவல் அறிந்த போலீஸார் மற்றும்  தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை ஒருவரது உடல் கூட கிடைக்கவில்லை.இது குறித்து பேசிய போலீஸார்  உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றனர். நீரில் மூழ்கிய 14 பேரில் பெரும்பாலோனோர் பெண்கள் மற்றும குழந்தைகள் ஆவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.