கலவரம் குறித்த ராகுல் கருத்துக்கு எதிராக காங். அலுவகம் முன்பு ஆர்பாட்டம்
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக 300க்கும் மேற்பட்டோர் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக 300க்கும் மேற்பட்டோர் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக குவிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் கருப்புகொடியுடன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீஸார் பேரிகார்டர்களை வைத்து தடுத்துநிறுத்தினர். அப்போது கலவரம் குறித்து நீதி கேட்டு போராட்டக்காரர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். மேலும் தடுப்புகளை உடைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும், இடையே தள்ளுமுள்று ஏற்பட்டது. அப்போது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.