முகப்பு
தற்போதைய செய்திகள்

கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சுனக்கம்: தேசியவாத காங் குற்றச்சாட்டு

மகாராஷ்ட்ராவில் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில் காங்கிரஸ் தாமதம் செய்வத

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மகாராஷ்ட்ராவில் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில் காங்கிரஸ் தாமதம் செய்வதாக தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரபு படேல் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாரஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி கட்களாகும். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ்ஆதரவு அளித்துவருகிறது. இந்நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவாத்தை நடத்துவதில் காங்கிரஸ்  தாமதம் செய்கிறது என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரவு படேல் கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டஅணி  அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு  பதில் அளித்து பேசிய அவர், காங்கிரசுடுன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் மறுப்பு தெரிவித்தார். மேலும். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, சரத்பவார் கூட்டணி தொடர்பாக சந்திக்கவில்லை என்றும், குஜராத் முதல்வர் என்ற அடிப்படையில் அவருடன், வேளாண் அமைச்சர் என்ற முறையில் சரத்பவார் சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.