முகப்பு
தற்போதைய செய்திகள்

சரத்பவார் கட்சிக்கு, பாஜக கூட்டணியில் இடம் கிடையாது: சிவசேனா

மகாராஷ்ட்ராவில் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் சரத்பவார், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

மகாராஷ்ட்ராவில் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் சரத்பவார், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல்கள் பரவியது

இது சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில் சரத்பவார் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டாம் என்றார். மேலும் மகாரஷ்ட்ராவை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் கிடையாது எனவே சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணியில் சேரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்ற தகவலை மறுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.