ராஜஸ்தானில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்: 11 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி அருகே தலப்கவுன் என்ற கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்ப
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி அருகே தலப்கவுன் என்ற கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருபிரிவினரையும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கிதுடன், பயங்கர ஆயுதங்களும் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இரண்டு சிறுமிகள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் மோதலை கட்டுக்குள்கொண்டுவந்தனர் மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த 11 பேரையும் அருகே உள்ளமருத்துவமனையில் அனுமதித்தனர். மோதல் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.