முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 22 நீதிமன்றங்களில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 22 நீதிமன்றங்களிலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு மேற்கொள்கிறார்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ரா.தாரணி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி கே.தேவதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 22 நீதிமன்றங்களிலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு மேற்கொள்கிறார்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ரா.தாரணி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி கே.தேவதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிற உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாக்களில் அமைந்துள்ள சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் , குற்றவியல் நீதிமன்றங்கள் ஆகிய 22 நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்திற்கு போர்ட்போலியோ (Portfolio) நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளார்.

ஆய்வுப் பணிகளின் முதல் நிலையாக சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வருகை தந்துள்ள ஆய்வுக் குழுவினர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 30.6.14 முதல், முதல்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் இந்த நீதிமன்றங்களில் ஜூலை 18 மற்றும் 19 தேதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நீதிமன்றம் தொடங்கி 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக உயர்நீதிமன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இந்த ஆய்வுப் பணிகளை சிறப்போடு நடத்த அனைத்து நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் செய்திக் குறிப்பில் நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →