வளரிளம் பெண்களின் தொடர்கல்வி, பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைப் பயணம்
வளரிளம் பெண்களின் தொடர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீட்ஸ் நிறுவனம் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய செய்திகள்வளரிளம் பெண்களின் தொடர்கல்வி, பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைப் பயணம்
வளரிளம் பெண்களின் தொடர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீட்ஸ் நிறுவனம் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.
வளரிளம் பெண்களின் தொடர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீட்ஸ் நிறுவனம் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கலைப் பயணத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ப்பின் ஒவ்வொரு நிலையிலும் செலவு, சுமை என்ற மனநிலையில் பார்க்கப்படுகிறார்கள். அதிலும் திருமணத்தின்போது வரதட்சிணை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகள் போன்ற சமூக நடைமுறைகள் பெற்றோருக்கு பெரும் சுமையாக உள்ளன.
இதனைக் குறைப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் துயர் துடைத்து வருகிறார். பெண் குழந்தைகளின் மீதான பாலின பாகுபாடு, பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் மற்றும் பல்வேறு வேலை சூழல்களில் குறிப்பாக பஞ்சாலைகளில் வேலை செய்யும் வளரிளம் பெண்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியன குறித்த கருத்துக்கள் இந்த பொம்மலாட்ட கலைப்பயணத்தில் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்தக் கலைப் பயணம் இம் மாதம் 11-ம் தேதி வரை திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை சென்றடையவுள்ளது என்றார் அவர்.