முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் டாக்டருக்கு ஐ.எம்.ஏ. தேசிய விருது

இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜனின் சிறப்பான மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையைப் பாராட்டி, கழகத்தின் தேசிய விருது மற்றும் சான்றிதழை

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் டாக்டருக்கு ஐ.எம்.ஏ. தேசிய விருது

இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜனின் சிறப்பான மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையைப் பாராட்டி, கழகத்தின் தேசிய விருது மற்றும் சான்றிதழை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜனின் சிறப்பான மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையைப் பாராட்டி, கழகத்தின் தேசிய விருது மற்றும் சான்றிதழை புதுதில்லியில் நடைபெற்ற டாக்டர்கள் தின விழாவில் மத்திய அமைச்சர்கள் வழங்கி கௌரவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஏ.செல்வராஜன். கடந்த 25 ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் இவர், தற்போது மாவட்டச் செயலாளராக உள்ளார்.இவரது தன்னலமற்ற மருத்துவ மற்றும் சுகாதார சேவை, திறமை, இந்திய மருத்துவக் கழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விருது வழங்கப்படுவதாக தேசிய தலைவர் டாக்டர் நரேந்திர ஷைனி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து புதுதில்லியில் நடைபெற்ற டாக்டர்கள் தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், மத்திய விஞ்ஞான தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திராசிங் ஆகியோர் டாக்டர் ஏ.செல்வராஜனுக்கு ஐ.எம்.ஏ.யின் தேசிய விருது மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர்.அப்போது இந்திய மருத்துவக் கழகத்தின் தேசிய தலைவர் டாக்டர் நரேந்திர ஷைனி, தேசிய தலைவர் டாக்டர் ஜிதிந்ரா பி படேல், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் நான்ஸி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தேசிய விருது பெற்றுள்ள டாக்டர் ஏ.செல்வராஜனுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →