அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் அனுமதியின்றி மணல்,மண் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து அப்பகுதியில் ஆலங்குடி வட்டாட்சியர் வெங்கிடாசலம் தலைமையிலான அதிகாரிகள்
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் அனுமதியின்றி மணல்,மண் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து அப்பகுதியில் ஆலங்குடி வட்டாட்சியர் வெங்கிடாசலம் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கொத்தமங்கலம் கீழக்காட்டில் இருந்து வந்துகொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த வட்டாட்சியர் வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸார் தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.