முகப்பு
தற்போதைய செய்திகள்

சுவர் இடிந்து 11 பேர் பலி: விஜயகாந்த் கண்டனம்

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த சம்பவம் மறைவதற்குள் சோழவரம் பகுதியில் தனியார் சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

சோழவரத்தில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் இறந்த சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த சம்பவம் மறைவதற்குள் சோழவரம் பகுதியில் தனியார் சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.காயம் அடைந்தவர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.தமிழகம் முழுவதும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அரசு எந்திரத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்ச, லாவண்யம்தான் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.தமிழகத்தில் கட்டட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அண்டை மாநில கட்டடத் தொழிலாளர்கள் இதுபோன்ற துயரச் சம்பவங்களில் பலியாவதால் தமிழகத்துக்கு அவப் பெயர்தான் ஏற்படுகிறது.தமிழக அரசின் நிவாரணம் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வாகாது.இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காத வண்ணம் கட்டடம் கட்டுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றிட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடந்தால், அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளையே பொறுப்பேற்கும் வண்ணம் அரசு விதிமுறைகளை விரைந்து ஏற்படுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →