முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து பல லட்சத்தில் வீடு: அதிகாரிகள் சீல் வைப்பு

பாளையங்கோட்டையில் சிறுவர் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீட்டை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் சிறுவர் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீட்டை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பாளையங்கோட்டை ரகுமத்நகரில் சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே சிறுவர் பூங்கா அமைக்க தேர்வு் செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த நாராயணமுத்து என்பவர் 5.5 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாநகராட்சி உதவி ஆணையர் ஆ. பெருமாள் தலைமையில் உதவி பொறியாளர்கள் இளங்கோவன், விவேகானந்தன், சங்கரசுப்பிரமணியன், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் முருகேசன், மாநகராட்சி பணியாளர்கள், வருவாய்துறையினர் முன்னிலையில் அக்கட்டத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →