இளம்பெண் திருமணம் நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பழனியில் திருமண வயது வராத
பழனியில் புதன்கிழமை நடைபெறவிருந்த இளம்பெண் திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பழனியில் திருமண வயது வராத பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வுத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல்வாழ்வு அலுவலர் பெரியதுரை, அடிவாரம் போலீஸார் ஆகியோர் திருமணம் நடைபெற இருந்த அடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த மணப்பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெண் வீட்டார், மற்றும் பழனி அருகே பாப்பம்பட்டி லட்சுமாபுரத்தை சேர்ந்த மாப்பிள்ளை லோகநாதன்(26) வீட்டாரை அடிவாரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த அதிகாரிகள் திருமண வயதுக்கு முன்னர் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும், இரு வீட்டாரும் திருமண வயது வந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்பட்டது.