முகப்பு
தற்போதைய செய்திகள்

உண்மையை மறைத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர் மீது வழக்குப் பதிவு

பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் மனைவி சந்திரபூரணம்(37). இவர் இலங்கை அகதி ஆவார். இந்நிலையில் இவர் இலங்கை அகதி என்பதை மறைத்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

பழனி அருகே உண்மையை மறைத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் மனைவி சந்திரபூரணம்(37). இவர் இலங்கை அகதி ஆவார். இந்நிலையில் இவர் இலங்கை அகதி என்பதை மறைத்து போலியான ஆவணம் மூலம் ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இதை வைத்து இந்திய குடியுரிமை இருப்பது போல காட்டி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளார்.  இதைத் தொடர்ந்து உண்மையை அறிந்த மதுரை, ரோஸ்கோர்ஸ், பாரதிஉலா வீதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாய்க்கிழமை சாமிநாதபுரம் போலீஸார் சந்திரபூரணம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.