சுய நிதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு எம்.எல்.ஏ.யை முற்றுகை
அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், சனிக்கிழமை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியனை
தற்போதைய செய்திகள்சுய நிதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு எம்.எல்.ஏ.யை முற்றுகை
அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், சனிக்கிழமை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியனை
அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், சனிக்கிழமை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியனை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுய நிதி பாடப் பிரிவில் படித்த சுமார் 300 மாணவ மாணவியர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, தங்களுக்கும் அரசு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோரி்க்கையை முன்வைத்தனர்.
இவர்களிடம் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன், அரசின் கொள்கை முடிவு குறித்து விளக்கினர். இது மாவட்ட நிர்வாகமோ, பள்ளியோ எடுக்கும் முடிவு இல்லை. உங்களது கோரிக்கையை சட்டப் பேரவையில் பேசுகிறேன். அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இதனையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.