முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊர் பெயர் மாற்றம் பிரச்னை: நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

வள்ளியூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கு ஊர் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்னையில் புதன்கிழமை சிதம்பராபுரம் கிராம மக்கள்  திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

வள்ளியூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கு ஊர் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்னையில் புதன்கிழமை சிதம்பராபுரம் கிராம மக்கள்  திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியத்தில் சிதம்பராபுரம் யாக்கோபுரம் ஊராட்சி உள்ளது. 4 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் ஒரு வார்டுக்கு  சிதம்பராபுரம் என்று பெயர் சூட்ட வேண்டும் என சிதம்பராபுரம் கிராம மக்களும், யாக்கோபுரம் என்று பெயர் சூட்ட வேண்டும் என யாக்கோபுரம் கிராம மக்களும் வலியுறுத்தி வருகி்ன்றனர்.

ஊராட்சிக்கு பெயர் சூட்டுவது குறித்து கிராம மக்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே ஊராட்சிக்குட்பட்ட 2 ஆவது வார்டு சிதம்பராபுரம் என அழைக்கப்படும் என்று ஆட்சியர் கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கு யாக்கோபுரம் கிராம மக்கள் ஆட்சேபம் தெரிவித்து ஊருக்கு வெளியே தனியார் தோட்டத்தில் குடியேறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே புதன்கிழமை சிதம்பராபுரம் கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஸ்டாலின், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநிலத் தலைவர் குழை. காதர் தலைமையில் முற்றுகையிட்ட கிராம மக்கள் ஊராட்சியில் 2 ஆவது வார்டுக்கு தொடர்ந்து சிதம்பராபுரம் என பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →