முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 11 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 3 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 11.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 3 மி.மீ மழையும், ராமநதி, கருப்பாநதி அணைகளில் தலா 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 27 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 38 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

கணிசமாக நீர்வரத்து:

அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2530 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 151 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 135 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 12 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 309 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் அதிகரிப்பு:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 61.30 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 58.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடனாநதி அணையில் இருந்து 75 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 10 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 5 கனஅடியும் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 77.26 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.70 அடி உயர்ந்து 55.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 68.00 அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 17 அடி உயர்ந்து 85.00 அடியாக இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 40.21 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →