முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் 20வருட மரம் வெட்டப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் கடும் வறட்சியில் தவித்து வருகிறது.  மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலிலேயே குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. மழை குறைந்ததற்கு அதிக

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:55 AM
பகிர்:

பழனி நீதிமன்ற வளாகத்தில் இருந்த 20வயது மரம் வெட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் கடும் வறட்சியில் தவித்து வருகிறது.  மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலிலேயே குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. மழை குறைந்ததற்கு அதிக அளவில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் ஒரு காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. பழனியிலும் நகரில் பல இடங்களில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க இயற்கை ஆர்வலர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பழனியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுமார் 20 வயதுடைய மரத்தை ஒருவர் வெட்டி கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு குற்றவியல் நீதிமன்றமாக செயல்பட்ட பழைய கட்டிடம் தற்போது ஆவண காப்பகமாக உள்ளது. 

இதன் பின்புறம் வழக்கறிஞர்களால் நடப்பட்ட நவாப்பழமரம், கொடிக்காப்புளி மரம், வேப்ப மரம், யூகலிப்டஸ் மரங்கள் உள்ளது.  இவை சுமார் 20 வயதான மரங்கள் ஆகும்.  தவிர நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான மரங்கள் பச்சை பசேலென உள்ளது.  இந்நிலையில் கடந்த சிலதினம் முன் வீசிய காற்றில் சிலமரக்கிளைகள் ஒடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை சாமிதியேட்டரை அடுத்த தெரசம்மாள் காலனியை சேர்ந்த பரமன் என்பவர் சில ஆட்களுடன் வந்து ஒடிந்த கிளைகளை அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி வளாகம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கறிஞர்கள் அனுமதித்த நிலையில் அவர் பின்புறம் இருந்த பெரிய கொடிக்காப்புளி மரத்தை அடியோடு வெட்டி அதை பின்வழியாக கடத்த முயற்சித்துள்ளார்.  இதுகுறித்து அறிந்த வழக்கறிஞர்கள் அங்கே வரவே மரத்தை வெட்டியவர்கள் தப்பிவிட்டனர். 

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கோபி பழனி டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.