ஸ்ரீவிலி. அருகே 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிச்சையம்மாள் (40). இவர்களின் 15 வயது மகள், வத்திராயிருப்பில் உள்ள பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. அருகே 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிச்சையம்மாள் (40). இவர்களின் 15 வயது மகள், வத்திராயிருப்பில் உள்ள பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிச்சையம்மாள் (40). இவர்களின் 15 வயது மகள், வத்திராயிருப்பில் உள்ள பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 14-ம் தேதி பள்ளி செல்வதாகக் கூறிச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லையாம். உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரித்ததில் அவர் அன்று பள்ளிக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்களாம். அக்கம் பக்கம் விசாரித்ததில் நத்தம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஸ் என்பவர் மாணவியைக் கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் பிச்சையம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.