ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா: 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஜூலை 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை)
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா: 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஜூலை 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை)
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஜூலை 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று சிங்கம்மாள் குறடு மண்டபம், வானமாமலை மடம் ஆகிய இரு மண்டபங்களில் எழுந்தருளுகிறார்கள். இரவு ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சேர்த்தியில் பதினாறு வண்டிச் சப்பரத்தில் வீதி உலா வருகிறார்கள்.
10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 5-ம் திருநாளான 26-ம் தேதி (சனிக்கிழமை) ஐந்து கருடசேவை நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகியோர் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வர் சிறய அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.7-ம் திருநாளான 28-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
9-ம் திருநாளான 30-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.திருவிழா நாட்களின் ஆண்டாள் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாணட் பந்தலில் பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் விரிவாக செய்து வருகிறார்.
விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இதற்காக போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.விழாவினையொட்டி நகரில் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டு, தேர் வரும் ரத வீதிகளில் இருந்த மரக் கிளைகள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.