அச்சிறுப்பாக்கத்தில் கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
கடலூர் மாவட்டம் வண்ணாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மகன் நரேஷ்குமார் (வயது 38). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊருக்கு
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பூரிலிருந்து வந்தவரை அழைத்து வந்த கார் மீது சென்னை நோக்கி வந்த மணல்லாரி மோதிய விபத்தில் சனிக்கிழமை 4 பேர்கள் பலியான சம்பவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வண்ணாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மகன் நரேஷ்குமார் (வயது 38). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊருக்கு வருவதற்காக சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இவரை அழைத்து வர டாடா சுமோ காரில் அவரது உறவினர்களான செந்தில்குமார் (வயது 45), பாபு (வயது 32), ஆகியோர் வநத்னர். அந்த காரை டிரைவர் சிவா (வயது 23) ஒட்டிவந்தார். அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த நரேஷ்குமாரை அழைத்து வந்த கார் வேகமாக வந்ததில், தனது கட்டுபாட்டை மீறி சாலை நடுவில் உள்ள தடுப்புகளின் மோதி எதிர்பக்கமாக கார் வந்தது. அப்போது சென்னை நோக்கி வந்த மணல்லாரி மோதிய விபத்தில் சம்பவத்திலேயே,காரில் வந்த 4 பேர்கள் பலியான சம்பவம் நடைபெற்றது. மணல் லாரி மீது மோதியதில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்தவர்களை மீட்க அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் வந்து அதனை உடைத்து மீட்க வேண்டி இருந்தது.
சம்பவத்தை கேள்விபட்ட அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், சாலை போக்குவரத்தை சரி செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இறந்துபோன 4 பேர்களின் உடல்களை மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement