மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும், மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும், மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.முகமதுஅஸ்லாம், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழர் தேசிய முன்னணி செ.பழமலை, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ப.விநாயகமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆ.ரமேஷ், கோ.வி.தில்லைநாயகம்,
தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மாவட்டச் செயலாளர் விடுதலைச்செல்வன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் தங்க.கென்னடி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா, தமிழக இளைஞர் முன்னணி துணைச் செயலாளர் ஆ.குபேரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 112 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.